பயங்கரவாதிகளை ஆதரிக்கும் வரலாறு கொண்டது பாக்.,: ஐ.நா.,வில் இந்தியா பதிலடி

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (16) | |
Advertisement
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையில் காஷ்மீர் விவகாரம் இடம்பெற்றதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, ‛‛பாகிஸ்தான், பயங்கரவாதிகளை ஆதரிக்கும் வரலாறு கொண்டது '' என பதிலடி கொடுத்து உள்ளது.ஐ.நா., பொதுக் கூட்டத்தில் பாக்., பிரதமர் இம்ரான் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. அவரது பதிவு செய்யப்பட்ட பேச்சு ஒலிபரப்பப்பட்டது. அதில்,
பயங்கரவாதிகள், இந்தியா, பாகிஸ்தான், ஐக்கியநாடுகள், ஐநா, India,Pakisthan,U.N,United Nations,இந்தியா,ஐ.நா,ஐக்கிய நாடுகள் அவை,பாகிஸ்தான்

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையில் காஷ்மீர் விவகாரம் இடம்பெற்றதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, ‛‛பாகிஸ்தான், பயங்கரவாதிகளை ஆதரிக்கும் வரலாறு கொண்டது '' என பதிலடி கொடுத்து உள்ளது.

ஐ.நா., பொதுக் கூட்டத்தில் பாக்., பிரதமர் இம்ரான் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. அவரது பதிவு செய்யப்பட்ட பேச்சு ஒலிபரப்பப்பட்டது. அதில், காஷ்மீர் விவகாரம், காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இடம்பெற்றிருந்தது


latest tamil newsஐக்கிய நாடுகள் சபையில், பதிலளிக்கும் உரிமையை பயன்படுத்தி இந்தியாவின் முதன்மை செயலர் ஸ்னேகா துபே அளித்த பதில்: இந்தியாவிற்கு எதிராக ஐ.நா., சபைகளை தவறாக பயன்படுத்த பொய்யான மற்றும் திரிக்கப்பட்ட கருத்துகளை பாகிஸ்தான் தலைவர்கள் பரப்புவது இது முதல்முறை அல்ல என்பதையும், அவரது நாட்டில் பயங்கரவாதிகள் , சாமானியர்கள் போல் சாதாரணமாக வாழ்வதை உலக நாடுகளின் பார்வைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சியில் பாகிஸ்தான் தலைவர் ஈடுபட்டுள்ளார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

பயங்கரவாதிகளை உருவாக்குதல், உதவி செய்தல் மற்றும் ஆதரவு அளிக்கும் வரலாறு பாகிஸ்தானுக்கு உள்ளது அனைவருக்கும் தெரியும். பயங்கரவாதத்தை தனது கொள்கையாக வைத்துள்ளதுடன், பயிற்சி, நிதியுதவி, ஆயுதங்கள் வழங்கல் மற்றும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தல் ஆகியவற்றிற்காக உலகளவில் அங்கீகாரம் பெற்ற நாடாக பாகிஸ்தான் உள்ளது. ஐ.நா., பாதுகாப்பு சபையால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் கொண்ட நாடு என்ற சாதனையையும் அந்நாடு பெற்றுள்ளது.


latest tamil news


அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை பயங்கரவாதிகள் தகர்த்ததன் 20ம் ஆண்டு நினைவு தினத்தை கடந்த சில நாட்களுக்கு முன் அனுசரித்தோம். இந்த கொடூரமான சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லாடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது. இன்றும் அவரை பாகிஸ்தான் தலைவர்கள் தியாகி என புகழ்கின்றனர். பாகிஸ்தான் தலைவர், பயங்கரவாத நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது கவலை அளிக்கிறது. இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகள் நவீன உலகில் ஏற்று கொள்ளப்படவில்லை.

வெளியில் தீயணைப்பு வீரர் போல் காட்டி கொள்ளும் பாகிஸ்தான் உண்மையில் தீக்குளித்து கொண்டிருக்கிறது. அண்டை நாடுகளுக்கு மட்டுமே தீங்கு விளைவிப்பார்கள் என்ற நம்பிக்கையில், பயங்கரவாதிகளை கொள்ளைபுறத்தில் பாகிஸ்தான் வளர்த்து வருகிறது. அவர்களின் கொள்கையால், எங்கள் பிராந்தியமும், உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. மறுபுறம், அவர்கள் தங்களது நாட்டில் நடக்கும் மதவெறியை, பயங்கரவாத செயலாக மறைக்க முயற்சி செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-செப்-202107:23:01 IST Report Abuse
அப்புசாமி ஐ.நா வேண்டாம்னு சொன்னவங்க ஏன் அங்கே போய் கருத்து தெரிவிக்கிறீங்க? நேரு செஞ்சா தப்பு, நீங்க செஞ்சா கரீட்டா?
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
25-செப்-202120:44:09 IST Report Abuse
SUBBU வினை விதைத்தவன் வினையறுப்பான் கூடிய விரைவில்...
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
25-செப்-202120:42:39 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இந்த விஷயம் ஐ நா வுக்கு அல்லது உறுப்பு நாடுகளுக்கு தெரியாதுங்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X