பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்றுமதி வாய்ப்புகளை பயன்படுத்த தொழில் முனைவோருக்கு யோசனை

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஈரோடு: மாவட்ட தொழில் மையம், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் சார்பில், ஏற்றுமதி வழிகாட்டுதல் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஈரோட்டில் நடந்தது.இதில் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரக துணை இயக்குனர் சுகன்யா பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் அலுமினியம், காரியம் உள்ளிட்ட பல்வேறு பொருள் ஏற்றுமதியாகிறது. மாநில அளவில், 10ம் இடத்தில் ஈரோடு உள்ளது. ஏற்றுமதியை மேலும்

ஈரோடு: மாவட்ட தொழில் மையம், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் சார்பில், ஏற்றுமதி வழிகாட்டுதல் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஈரோட்டில் நடந்தது.


இதில் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரக துணை இயக்குனர் சுகன்யா பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் அலுமினியம், காரியம் உள்ளிட்ட பல்வேறு பொருள் ஏற்றுமதியாகிறது. மாநில அளவில், 10ம் இடத்தில் ஈரோடு உள்ளது. ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க நிதி சார்ந்த, நிதி அல்லாத பிற நிலைகளிலும் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் உதவும். ஏற்கனவே உள்ள ஏற்றுமதி தொழிலை கூடுதலானவர்கள் துவங்கவும், விரிவுபடுத்தவும், புது ஏற்றுமதி தொழில்களை உருவாக்கவும் தொழில் முனைவோர் முன்வர வேண்டும். அவற்றுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தகுமார் உட்பட பலர் பேசினர்.

'பொறுமை அவசியமுங்க': காலை, 10:00 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட கருத்தரங்கு, 11:15 மணிக்கு துவங்கியது. கலெக்டர் பேசி முடித்தும், பெரும்பாலான ஏற்றுமதியாளர், தங்கள் அலுவலக பணியாளர் ஒருவரை இருக்க சொல்லிவிட்டு கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X