பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர், சாக்கடை வசதி கேட்டு மனு: மக்களுடன் 'இணைந்த' எம்.எல்.ஏ.,

Added : செப் 25, 2021
Share
Advertisement
சத்தியமங்கலம்: சத்தி நகராட்சி அலுவலகத்தில், குடிநீர் மற்றும் சாக்கடை வசதி கேட்டு, மக்கள் மனு அளித்தனர். சத்தியமங்கலம் நகராட்சி காசிக்காடு பகுதியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. பற்றாக்குறையாக உள்ளதால், மேல்நிலை தொட்டி அமைத்து குடிநீர் வினியோகிக்க வேண்டும். போதிய சாக்கடை வசதி இல்லாததால், கழிவுநீர் தேங்கி

சத்தியமங்கலம்: சத்தி நகராட்சி அலுவலகத்தில், குடிநீர் மற்றும் சாக்கடை வசதி கேட்டு, மக்கள் மனு அளித்தனர். சத்தியமங்கலம் நகராட்சி காசிக்காடு பகுதியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. பற்றாக்குறையாக உள்ளதால், மேல்நிலை தொட்டி அமைத்து குடிநீர் வினியோகிக்க வேண்டும். போதிய சாக்கடை வசதி இல்லாததால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கட்டி தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், சத்தி நகராட்சி அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் வந்தனர். அப்போது அவ்வழியே பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி சென்றார். மக்களை பார்த்து விட்டு வாகனத்தை நிறுத்தினார். குறைகளை கேட்ட பிறகு, அவர்களுடன் சேர்ந்து கொண்டார். நகராட்சி கமிஷனர் அமுதாவிடம் மனு வழங்கி, நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். புதிய குடிநீர் திட்டத்தில் காசிக்காடு பகுதி சேர்க்கப்பட்டு சீரான குடிநீர் வழங்கப்படும். சாக்கடை வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கமிஷனர் உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X