பொது செய்தி

தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை; தயாராக கலெக்டர் உத்தரவு

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஈரோடு: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், வெள்ளம் செல்லக்கூடிய பகுதிகளில் நீர்தேக்கம், கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். ஏரி, குளம் என நீர் நிலைகளில் தடை, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அணைகள், ஏரிகளின் கதவு, மதகுகளை சரிவர

ஈரோடு: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், வெள்ளம் செல்லக்கூடிய பகுதிகளில் நீர்தேக்கம், கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். ஏரி, குளம் என நீர் நிலைகளில் தடை, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அணைகள், ஏரிகளின் கதவு, மதகுகளை சரிவர இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். கனமழையின்போது, 24 மணிநேரமும் அவசர நிலைகளை கண்காணிக்க வேண்டும். பாதுகாப்பு முகாம்களின் பட்டியல், மேடான பகுதி, குடிநீர், ஜெனரேட்டர் வசதி, படகுகள், டார்ச் லைட், அரசு அலுவலகங்களின் வசதிகளை பட்டியலிட வேண்டும். அனைத்து துறையினரை ஒருங்கிணைத்து, வெள்ள நேரத்தில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X