பொது செய்தி

தமிழ்நாடு

பேனர்களை அகற்ற முடியாதது ஏன்? மாநகராட்சி கமிஷனர் விளக்கம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஈரோடு: பேனர்களை அகற்ற முடியாதது ஏன்? என்று கமிஷனர் விளக்கமளித்தார். தமிழகத்தில் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தும் வகையில், தனியார் மற்றும் பொது இடங்களில் அமைக்கப்பட்ட விளம்பர பேனர், பலகைகளை அகற்ற, தமிழக அரசு உத்தரவிட்டது. செப்.,20ம் தேதி கடைசி நாள் என்று கெடுவும் விதித்தது. ஆனால், ஈரோடு மாநகர், மாவட்டத்தில் இதற்கான நடவடிக்கை ஏதுமில்லை. மாநகரில் பல இடங்களில், பிரதான

ஈரோடு: பேனர்களை அகற்ற முடியாதது ஏன்? என்று கமிஷனர் விளக்கமளித்தார். தமிழகத்தில் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தும் வகையில், தனியார் மற்றும் பொது இடங்களில் அமைக்கப்பட்ட விளம்பர பேனர், பலகைகளை அகற்ற, தமிழக அரசு உத்தரவிட்டது. செப்.,20ம் தேதி கடைசி நாள் என்று கெடுவும் விதித்தது. ஆனால், ஈரோடு மாநகர், மாவட்டத்தில் இதற்கான நடவடிக்கை ஏதுமில்லை. மாநகரில் பல இடங்களில், பிரதான கட்டடங்களில் பிரமாண்டமாக நின்று, விளம்பர பலகை, பேனர்கள் ஜொலிக்கின்றன.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது: விளம்பர பேனர் அகற்றும் விஷயத்தில் மாநகராட்சி பணியாளர், அலுவலர்கள் ஆய்வு செய்தனர். சாலையோரத்தில் புதிதாக வைக்கப்படும் பேனர் உடனடியாக அகற்றப்படுகிறது. கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், மாவட்ட நிர்வாகத்தில் அனுமதி பெற்றுள்ளவை. அதை அகற்றலாம் என்றால் நீதிமன்ற தடையாணை பெற்றுள்ளனர். குறிப்பாக மாநகரில், இரண்டு விளம்பர நிறுவனங்கள், 39 போர்டுகளுக்கு தடையாணை பெற்றுள்ளனர். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X