பொது செய்தி

தமிழ்நாடு

வணிகர் சங்கங்கள் பேரமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஈரோடு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் தேவராஜா தலைமை வகித்தார். மாநில இணை செயலாளர் சிவநேசன், மாவட்ட செயலாளர் சண்முகவேல் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் விக்கிரமராஜா, பொருளாளர் சதக்கத்துல்லா மாவட்ட பொருளாளர் ராஜகோபால், மாவட்ட துணை தலைவர் செல்வம் உட்பட பலர் பேசினர். பன்னாட்டு

ஈரோடு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் தேவராஜா தலைமை வகித்தார். மாநில இணை செயலாளர் சிவநேசன், மாவட்ட செயலாளர் சண்முகவேல் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் விக்கிரமராஜா, பொருளாளர் சதக்கத்துல்லா மாவட்ட பொருளாளர் ராஜகோபால், மாவட்ட துணை தலைவர் செல்வம் உட்பட பலர் பேசினர். பன்னாட்டு நிறுவனங்கள் உணவு பொருள் மொத்த மற்றும் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக தடை செய்ய வேண்டும். தமிழகத்தில், 50 கிலோ தராசுக்கு முத்திரை கட்டணம் இரு மடங்காக உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவு பொருட்கள் தர ஆய்வு சோதனை கூடங்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X