சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டுக்கு அழைத்து கணவனுக்கு அடி; பிரிந்து வாழும் மனைவி மீது வழக்கு

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோபி: கோபி அருகே கூகலூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 44; கூகலூர் அரசு நடுநிலைப்பள்ளி பகுதி நேர ஆசிரியர். இவரின் மனைவி கிருத்திகா, 38; தம்பதிக்கு, 11 வயதில் மகன் உள்ளார். கிருத்திகா பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கருத்து வேறுபாடால் ஓராண்டாக கணவனை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் சரவணக்குமார் என்பவருடன், கிருத்திகாவுக்கு தொடர்பு இருப்பதாக, பாலகிருஷ்ணனுக்கு தகவல்

கோபி: கோபி அருகே கூகலூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 44; கூகலூர் அரசு நடுநிலைப்பள்ளி பகுதி நேர ஆசிரியர். இவரின் மனைவி கிருத்திகா, 38; தம்பதிக்கு, 11 வயதில் மகன் உள்ளார். கிருத்திகா பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கருத்து வேறுபாடால் ஓராண்டாக கணவனை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் சரவணக்குமார் என்பவருடன், கிருத்திகாவுக்கு தொடர்பு இருப்பதாக, பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் கேட்டபோது, புதுப்பாளையத்தில் தான் வசிக்கும் வீட்டுக்கு வருமாறு கிருத்திகா கூறினாராம். அவர் சென்றபோது, அங்கிருந்த கிருத்திகா உள்ளிட்ட நான்கு பேர், பாலகிருஷ்ணனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். கோபி அரசு மருத்துவமனையில் சேர்ந்த அவர் புகாரளித்தார். இதன்படி கிருத்திகா, சரவணக்குமார், 35, உறவினர்கள் முரளி, 35, பிரகலநாதன், 45, ஆகியோர் மீது, கோபி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X