காக்காவை விரட்ட மின்மாற்றியில் கறுப்புக்கொடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காக்காவை விரட்ட மின்மாற்றியில் கறுப்புக்கொடி

Added : செப் 25, 2021
Share
மேட்டூர்: காக்காவை விரட்ட, மின்மாற்றியில் கறுப்புக்கொடி கட்டப்பட்டுள்ளதாக, வாரிய அதிகாரிகள் கூறினர். சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் இருந்து, மின்பகிர்மான வட்ட அலுவலகம் செல்லும் சாலையோரம், மின்மாற்றி உள்ளது. அதன் உச்சியில் நேற்று கறுப்புக்கொடி கட்டப்பட்டிருந்ததால், மக்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து, பெயர் கூற விரும்பாத மின்வாரிய

மேட்டூர்: காக்காவை விரட்ட, மின்மாற்றியில் கறுப்புக்கொடி கட்டப்பட்டுள்ளதாக, வாரிய அதிகாரிகள் கூறினர். சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் இருந்து, மின்பகிர்மான வட்ட அலுவலகம் செல்லும் சாலையோரம், மின்மாற்றி உள்ளது. அதன் உச்சியில் நேற்று கறுப்புக்கொடி கட்டப்பட்டிருந்ததால், மக்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து, பெயர் கூற விரும்பாத மின்வாரிய அதிகாரி கூறுகையில், 'இறைச்சி கடைகள் உள்ளதால், காக்கைகள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. அந்த காக்கைகள், மின்மாற்றியில் அமர்வதால் மின்தடை ஏற்படுகிறது. காக்கைகளை விரட்டியடிக்க, கறுப்புக்கொடி கட்டப்பட்டுள்ளது' என்றார். மின்மாற்றியில் கறுப்புக்கொடி கட்டினால், காக்கைகள் வராது எனக்கூறி, வாரிய ஊழியர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளதை, சுற்றுப்பகுதி மக்கள் கிண்டலடித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X