பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: 206 ஓட்டுச்சாவடி தயார்

Added : செப் 25, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில், 35 பதவிக்கு, அக்., 9ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. அதற்காக, 206 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், ஆண், பெண் ஓட்டுச்சாவடி தலா, 5, பொது, 196 அடக்கம். தலைமை தேர்தல் அலுவலர் தலைமையில், ஓட்டுச்சாவடி அலுவலர், நிலை, 1, 2, 3 என, ஒரு ஓட்டுச்சாவடி பணியில், 4 பேர் ஈடுபடுகின்றனர். அவர்கள் உள்பட, 865 பேருக்கு, தேர்தல் பணி தொடர்பாக, நேற்று பயிற்சி

சேலம்: சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில், 35 பதவிக்கு, அக்., 9ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. அதற்காக, 206 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், ஆண், பெண் ஓட்டுச்சாவடி தலா, 5, பொது, 196 அடக்கம். தலைமை தேர்தல் அலுவலர் தலைமையில், ஓட்டுச்சாவடி அலுவலர், நிலை, 1, 2, 3 என, ஒரு ஓட்டுச்சாவடி பணியில், 4 பேர் ஈடுபடுகின்றனர். அவர்கள் உள்பட, 865 பேருக்கு, தேர்தல் பணி தொடர்பாக, நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. வரும், 29 அக்., 8ல் அடுத்தடுத்து பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர். ஓட்டுச்சீட்டு மூலம் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. மாவட்ட(50 ஆயிரம் ஓட்டு) ஊராட்சி உறுப்பினருக்கு மஞ்சள் நிறம், ஒன்றிய(5,000 ஓட்டு) உறுப்பினர் பதவிக்கு பச்சை நிறம், ஊராட்சி தலைவருக்கு இளஞ்சிவப்பு, ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வெள்ளை நிற ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படும்.


போட்டியின்றி தேர்வு: தலைவாசலில், மணிவிழுந்தான் ஊராட்சி, 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், இருவர் வாபஸ் பெற்றதால், மணிவிழுந்தானை சேர்ந்த நதியா, வார்டு உறுப்பினராக போட்டியின்றி தேர்வாகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X