பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் 24 மணி நேரத்தில் 150 ரவுடிகள் சுற்றிவளைப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாநகர், மாவட்டத்தில், 24 மணி நேரத்தில், 150 ரவுடிகளை, போலீசார் கைது செய்தனர். நெல்லை, திண்டுக்கல், மதுரை, சேலம் ஆகிய இடங்களில் நடந்த கொலைகளை அடுத்து, ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ?ஹாதா, துணை கமிஷனர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார், ரவுடிகளின் வீடுகளுக்கே சென்று தேடுதல்

சேலம்: சேலம் மாநகர், மாவட்டத்தில், 24 மணி நேரத்தில், 150 ரவுடிகளை, போலீசார் கைது செய்தனர். நெல்லை, திண்டுக்கல், மதுரை, சேலம் ஆகிய இடங்களில் நடந்த கொலைகளை அடுத்து, ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ?ஹாதா, துணை கமிஷனர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார், ரவுடிகளின் வீடுகளுக்கே சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று மாலை வரை, 75 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் தலைமையில் போலீசார், 75 ரவுடிகளை கைது செய்தனர். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு தொடங்கி, நேற்று மாலை, 6:00 மணி வரை, சேலம் மாவட்டம், மாநகரில், 150 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவும், ரவுடிகள் மீதான கைது நடவடிக்கையை போலீசார் தொடர்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X