பொது செய்தி

தமிழ்நாடு

எரிசாராயம் பதுக்கிய 2 பேருக்கு 'குண்டாஸ்'

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஆத்தூர்: எரிசாராயம் பதுக்கி வைத்திருந்து கைதான இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது. வாழப்பாடி, முத்தம்பட்டி ரயில்வே கேட் அருகேயுள்ள கிடங்கில், கடந்த ஆக., 28ல், சேலம் மண்டல மதுவிலக்கு மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதில், அங்கு, 35 கேன்களில் பதுக்கப்பட்டிருந்த, 27.12 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 ஆயிரத்து, 850 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த

ஆத்தூர்: எரிசாராயம் பதுக்கி வைத்திருந்து கைதான இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது. வாழப்பாடி, முத்தம்பட்டி ரயில்வே கேட் அருகேயுள்ள கிடங்கில், கடந்த ஆக., 28ல், சேலம் மண்டல மதுவிலக்கு மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதில், அங்கு, 35 கேன்களில் பதுக்கப்பட்டிருந்த, 27.12 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 ஆயிரத்து, 850 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், பெத்தநாயக்கன்பாளையம், எடப்பட்டியை சேர்ந்த தமிழரசன், 41, கன்னியாகுமரி, கிளியூர், தச்சன்விளைவீடு பகுதியை சேர்ந்த கனகராஜ், 49, ஆகியோரை, போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, சேலம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பரிந்துரைக்க, அதையேற்று, சேலம் கலெக்டர் கார்மேகம், நேற்று உத்தரவிட்டார். இதனால், இருவர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது. இதில், கனகராஜ் ஐந்தாம் முறை, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கொலை, கொள்ளை வழக்கு: தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய, சேலம், சிவதாபுரம், பனங்காட்டை சேர்ந்தவர் சுரேஷ், 22. இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பரிந்துரைப்படி, சேலம் கலெக்டர் கார்மேகம் நேற்று உத்தரவிட்டார். அதன்படி, சேலம் மத்திய சிறையில் உள்ள சுரேஷ் மீது குண்டாஸ் பாய்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X