பொது செய்தி

தமிழ்நாடு

வடிகால் இல்லாததால் மழைநீர் தேக்கம்: அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் சிரமம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
சேலம்: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் பரவலாக மழை பெய்கிறது. சேலத்தில் இரு நாளுக்கு முன், நள்ளிரவில் கொட்டித்தீர்த்த மழை, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு தொடங்கி, 1:00 மணிவரை பெய்தது. அதிகபட்சம், நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பெத்தநாயக்கன்பாளையத்தில், 105 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. சங்ககிரி, 87, ஆத்தூர், 61, ஏற்காடு, 41, மேட்டூர், 28.8, சேலம், 15.7, கரியகோவில், 10,

சேலம்: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் பரவலாக மழை பெய்கிறது. சேலத்தில் இரு நாளுக்கு முன், நள்ளிரவில் கொட்டித்தீர்த்த மழை, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு தொடங்கி, 1:00 மணிவரை பெய்தது. அதிகபட்சம், நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பெத்தநாயக்கன்பாளையத்தில், 105 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. சங்ககிரி, 87, ஆத்தூர், 61, ஏற்காடு, 41, மேட்டூர், 28.8, சேலம், 15.7, கரியகோவில், 10, இடைப்பாடி, 9.4, கெங்கவல்லி, 5, ஆணைமடுவு, 2 மி.மீ., மழை பெய்தது. கடந்த ஜூன், 1ல் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, வரும், 30ல் நிறைவடைகிறது. நேற்று வரை, சேலத்தில், 484.2 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இயல்பான மழை அளவு, 386.5 மி.மீ., அதனுடன் ஒப்பிடுகையில், 25 சதவீத மழை கூடுதலாக பெய்துள்ளது. தொடர் மழையால், ஏற்காடு பிரதான மலைப்பாதையில் மண் அரிப்பு உண்டாகி, ராட்சத பாறை உருண்டோடி வந்து, சாலையை அடைத்துக்கொண்டு நின்றது. இதனால் போக்குவரத்து தடைபட்டது. நெடுஞ்சாலை அதிகாரிகள், ஊழியர்கள், பொக்லைன் மூலம் பாறையை உடைத்து அப்புறப்படுத்தி, சாலையை சீரமைத்தனர். சேலம், தாதம்பட்டியில், 100 ஏக்கரில், மழைநீருடன் அடித்து வரப்பட்ட மண் தேங்கி, சோளம், வாழை, தீவனப்புல், தென்னை ஆகியன சேதமாகிவிட்டதாக, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தெரிவித்தனர். இனி மூன்று மாதங்களுக்கு பயிர் செய்யாத அளவு, விளைநிலம் நாசமாகிவிட்டது. இதேநிலை மூன்று ஆண்டாக நீடிக்கிறது. உரிய வடிகால் அமைக்காமல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது. இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திடம், பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையென, விவசாயிகள் கூறினர். அங்குள்ள சரபங்கா ஓடைக்கு, 250 மீ., தூரத்துக்கு, வடிகால் அமைத்துவிட்டால், பிரச்னைக்கு நிரந்தரவு தீர்வு கிடைக்கும் என்பதை பலமுறை வலியுறுத்தியும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். அழகாபுரத்தில், மாரிமுத்து தெரு, அன்னை தெரசா நகர் குடியிப்பு பகுதிகளில், போதிய வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி, அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். ஏற்காடு பிரதான சாலையில், சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலைகளில் தேங்கியதால், பாதசாரிகள் உள்ளிட்ட அனைவரும் படாதபாடுபட்டு, அப்பகுதியை கடந்து சென்றனர். அதேபோல், கோரிமேடு, கே.கே.நகர் உள்பட நகரின் தாழ்வான பல பகுதிகளில், தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X