பொது செய்தி

தமிழ்நாடு

கட்டிய சீட்டு பணத்தை மீட்டுதரக் கோரி மனு

Added : செப் 25, 2021
Share
Advertisement
தர்மபுரி: மாதந்தோறும் கட்டி வந்த சீட்டு தொகையை மீட்டு தரக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கைலாயபுரத்தை சேர்ந்த மக்கள், 25 பேர் கூலி தொழில் செய்து வருகிறோம். இதே கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் முருகேசன் என்பவரிடம், நாங்கள் மாதாந்திர சீட்டு கட்டி வந்தோம். இதில் ஒரு லட்சம், இரண்டு

தர்மபுரி: மாதந்தோறும் கட்டி வந்த சீட்டு தொகையை மீட்டு தரக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கைலாயபுரத்தை சேர்ந்த மக்கள், 25 பேர் கூலி தொழில் செய்து வருகிறோம். இதே கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் முருகேசன் என்பவரிடம், நாங்கள் மாதாந்திர சீட்டு கட்டி வந்தோம். இதில் ஒரு லட்சம், இரண்டு மற்றும் மூன்று லட்சம் ரூபாய் வரை சீட்டு கட்டி வந்தோம். குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த மே மாதம், அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நாங்கள் கட்டிய சீட்டு தொகையில், பாதி தொகையாவது தரக்கேட்டு, முருகேசனின் மனைவி பிரியாவிடம் தெரிவித்து வந்தோம். பணம் தருவதாக கூறிய அவர், தற்போது தனது கணவர் சீட்டு நடத்தியதே தெரியாது எனக்கூறி, பணம் தர மறுத்து வருகிறார். எனவே, சீட்டு கட்டி ஏமாந்த எங்களுக்கு உரிய பணத்தை வாங்கி தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X