பொது செய்தி

தமிழ்நாடு

இடைநின்ற மாணவர்களை சேர்க்கும் பணியில் ஆசிரியர்கள்

Added : செப் 25, 2021
Share
Advertisement
பென்னாகரம்: பள்ளிக் கல்வியை பாதியில் விட்டு விடும் மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வியை தொடரும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல்பட்டு வருகிறது. அதன்படி, தர்மபுரி முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அறிவுரைப்படி, பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து இடை நின்ற மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஆசிரியகள்

பென்னாகரம்: பள்ளிக் கல்வியை பாதியில் விட்டு விடும் மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வியை தொடரும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல்பட்டு வருகிறது. அதன்படி, தர்மபுரி முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அறிவுரைப்படி, பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து இடை நின்ற மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஆசிரியகள் ஈடுபட்டுள்ளனர். கள்ளிபுரம், அண்ணாநகர், கிருஷ்ணாபுரம், போடூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்வியை பாதியில் விட்ட மாணவர்களின் கல்வி தொடர செய்யும் வகையில் தமிழாசிரியர் முனியப்பன், சுரேஷ், கண்ணன், லில்லி, பெருமாள் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, பெற்றோர்களிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்து கூறினர். இதையடுத்து, இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் வழங்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X