ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மையம்| Dinamalar

ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மையம்

Added : செப் 25, 2021
Share
பாலக்கோடு: ஆபத்தான நிலையில் உள்ள, அங்கன்வாடி மையத்தை மாற்ற வேண்டும். தர்மபுரி மாவட்டம், வேப்பலஹள்ளி கிராமத்தில் உள்ள அங்கான்வாடி மையம் மிகவும் பழமையான கட்டடத்தில் அமைந்துள்ளது. 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இங்குள்ள கழிவறை தண்ணீர் இல்லாமல் பூட்டியே உள்ளது. மேற்கூரை சிமென்ட் சீட்டுகள் உடைந்துள்ளதால், மையத்தின் உள்ளே மழை நீர் சூழ்ந்து கொள்கிறது. மேலும்

பாலக்கோடு: ஆபத்தான நிலையில் உள்ள, அங்கன்வாடி மையத்தை மாற்ற வேண்டும். தர்மபுரி மாவட்டம், வேப்பலஹள்ளி கிராமத்தில் உள்ள அங்கான்வாடி மையம் மிகவும் பழமையான கட்டடத்தில் அமைந்துள்ளது. 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இங்குள்ள கழிவறை தண்ணீர் இல்லாமல் பூட்டியே உள்ளது. மேற்கூரை சிமென்ட் சீட்டுகள் உடைந்துள்ளதால், மையத்தின் உள்ளே மழை நீர் சூழ்ந்து கொள்கிறது. மேலும் சுவர்களும் தரம் இல்லாமல் உள்ளது. மையன் நுழைவு வாயின் மேல் உள்ள சிமென்ட் சிலாப் சேதமடைந்து, எந்த நேரத்திலும் குழந்தைகள் மீது விழும் அபாயத்தில் உள்ளது. இதனால், குழந்தைகளை அங்கன்வாடி மையம் அனுப்புவதற்கு பெற்றோர் தயங்குகின்றனர். குழந்தைகளை வேறு இடத்தில் அமர்த்தி, பாடம் நடத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X