சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் போலீசை திட்டிய மினி பஸ் டிரைவர் கைது

Added : செப் 25, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரியில், போக்குவரத்து பெண் போலீசை தகாத வார்த்தையால் திட்டிய, மினி பஸ் டிரைவர், மேலாளர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி போக்குவரத்து எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் மீனா, 38. இவர், நேற்று காலை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் உள்ள, ரயில்வே ரோடு பிரிவு சாலையில், போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக தனியார் மினி

தர்மபுரி: தர்மபுரியில், போக்குவரத்து பெண் போலீசை தகாத வார்த்தையால் திட்டிய, மினி பஸ் டிரைவர், மேலாளர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி போக்குவரத்து எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் மீனா, 38. இவர், நேற்று காலை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் உள்ள, ரயில்வே ரோடு பிரிவு சாலையில், போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக தனியார் மினி பஸ் வேகமாக வந்துள்ளது. இதை மீனா தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது பஸ்சை ஓட்டி வந்த, வட்டார வளர்ச்சி காலனியை சேர்ந்த கோகுல், 23, மேலாளர் கார்த்திக், 26, ஆகியோர் பஸ்சை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். மேலும், எஸ்.ஐ., மீனாவை தகாத வார்த்தையால் திட்டிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து மீனா அளித்த புகார்படி, தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X