சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபானம் கடத்தியவர் கைது; கார், 1,736 பாக்கெட் பறிமுதல்

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஓசூர்: கர்நாடகா மாநிலத்தில் இருந்து, மதுபானம் கடத்தியவரை கைது செய்த போலீசார், கார் மற்றும் 1,736 பாக்கெட் பறிமுதல் செய்தனர். ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., காளியப்பன் மற்றும் போலீசார், ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து, தமிழகம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, கர்நாடகா மதுபானங்களை

ஓசூர்: கர்நாடகா மாநிலத்தில் இருந்து, மதுபானம் கடத்தியவரை கைது செய்த போலீசார், கார் மற்றும் 1,736 பாக்கெட் பறிமுதல் செய்தனர். ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., காளியப்பன் மற்றும் போலீசார், ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து, தமிழகம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, கர்நாடகா மதுபானங்களை திருப்பத்தூருக்கு கடத்தி செல்வது தெரிந்தது. இதனால், காரை ஓட்டி வந்த திருப்பத்தூர் மாவட்டம், பனந்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜா, 43, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய மதுபானங்களை கடத்தி செல்வது தெரிந்தது. அவரிடம் இருந்து, இன்னோவா கார் மற்றும் 1,736 மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X