லாரியின் சக்கரத்தில் சிக்கிய தாய், மகன் உயிர் தப்பிய அதிசயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரியின் சக்கரத்தில் சிக்கிய தாய், மகன் உயிர் தப்பிய அதிசயம்

Added : செப் 25, 2021
Share
ஓசூர்: ஓசூர் அருகே, லாரியின் சக்கரத்தில் சிக்கிய தாய், மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஓசூர் அடுத்த, பாகலூர் பெரியார் நகரை சேர்ந்தவர் ரூபன் மனைவி சலோமி, 41. இவரது மகன் டானியல், 21. இவர்கள் இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில், பாகலூரில் உள்ள மாஸ்தி சாலையில் சென்றனர். பாகலூர் பஞ்., அலுவலகம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற டிப்பர் லாரியை, இடதுபுறம் முந்தி செல்ல டானியல்

ஓசூர்: ஓசூர் அருகே, லாரியின் சக்கரத்தில் சிக்கிய தாய், மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஓசூர் அடுத்த, பாகலூர் பெரியார் நகரை சேர்ந்தவர் ரூபன் மனைவி சலோமி, 41. இவரது மகன் டானியல், 21. இவர்கள் இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில், பாகலூரில் உள்ள மாஸ்தி சாலையில் சென்றனர். பாகலூர் பஞ்., அலுவலகம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற டிப்பர் லாரியை, இடதுபுறம் முந்தி செல்ல டானியல் முயன்றார். சாலையில் இருந்து மண்ணுக்குள் பைக் இறங்கியதால் சறுக்கிய இருவரும், லாரியின் முன்புற இடதுபுற டயரில் சிக்கினர். ஆனால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயமடைந்த அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த 'சிசிடிவி' கேமரா காட்சிகள் நேற்று வாட்ஸ் ஆப்களில் வைரலானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X