சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புள்ளி மான் வேட்டை; இருவருக்கு காப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, மின்வேலி அமைத்து, புள்ளி மானை வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் மகேந்திரன் மேற்பார்வையில், கல்லாவி பிரிவு வனவர் துரைக்கண்ணு தலைமையில், வனக்காப்பாளர்கள் அங்குரதன், மருகன், வனக்காவலர் பூபதி ஆகியோர் நேற்று காலை, 6:00 மணிக்கு, நொச்சிப்பட்டி, கல்லாவி காப்புக்காட்டில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, மின்வேலி அமைத்து, புள்ளி மானை வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் மகேந்திரன் மேற்பார்வையில், கல்லாவி பிரிவு வனவர் துரைக்கண்ணு தலைமையில், வனக்காப்பாளர்கள் அங்குரதன், மருகன், வனக்காவலர் பூபதி ஆகியோர் நேற்று காலை, 6:00 மணிக்கு, நொச்சிப்பட்டி, கல்லாவி காப்புக்காட்டில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியபொம்பட்டி பவர் லைன் சரகத்தில், மின்வேலி அமைத்து, புள்ளி மானை வேட்டையாடிய இருவரை கையும், களவுமாக பிடித்தனர். விசாரணையில், பெரியபொம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகளான கார்த்திகேயன், 34, சரவணன், 27, ஆகியோரை கிருஷ்ணகிரி வனச்சரகர் அலுவலத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X