கோவிலில் மரக்கன்று நடும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலில் மரக்கன்று நடும் விழா

Added : செப் 25, 2021
Share
கிருஷ்ணகிரி: தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்கு சொந்தமான காலி இடங்களில், 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியில் இருந்து ஜெகதேவி செல்லும் சாலையில் உள்ள, பாலமுருகன் கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட ஹிந்து அறநிலையத்துறை இணை இயக்குனர் கஜேந்திரன் தலைமை வகித்தார். மரக்கன்று

கிருஷ்ணகிரி: தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்கு சொந்தமான காலி இடங்களில், 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியில் இருந்து ஜெகதேவி செல்லும் சாலையில் உள்ள, பாலமுருகன் கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட ஹிந்து அறநிலையத்துறை இணை இயக்குனர் கஜேந்திரன் தலைமை வகித்தார். மரக்கன்று நடவு செய்யும் பணியை பர்கூர் எம்.எல்.ஏ., மதியழகன் தொடங்கி வைத்தார். கிழக்கு மாவட்ட, தி.மு.க., துணை செயலாளர் நாகராஜ், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ராஜேந்திரன், பாலன், ஹிந்து சமய அறநிலையத்துறை பர்கூர் சரக ஆய்வாளர் அண்ணாதுரை, செயல் அலுவலர் கிருஷ்ணன், அர்ச்சகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X