பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.20 லட்சத்தில் நவீன கருவிகள் அரசு மருத்துவமனையில் அமைப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, தீவிர சிகிச்சை படுக்கை வசதி, ஒரு அதிதீவிர சிகிச்சை படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆறு படுக்கைகள், நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த குழந்தைகளுக்கு, மருத்துவ கண்காணிப்புக்காக, 'ஸ்டெப் டவுன் வார்டு' இரண்டு

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, தீவிர சிகிச்சை படுக்கை வசதி, ஒரு அதிதீவிர சிகிச்சை படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆறு படுக்கைகள், நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த குழந்தைகளுக்கு, மருத்துவ கண்காணிப்புக்காக, 'ஸ்டெப் டவுன் வார்டு' இரண்டு படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சையளிக்க கூடுதல் வசதிகள் ஏற்படுத்தும் வகையில், 20 படுக்கைகளுடன் கூடிய குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, சேலத்தை சேர்ந்த காசநோய் ஆராய்ச்சியாளர் சேசசைலம் சார்பில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். எம்.பி., சின்ராஜ், எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், குழந்தைகளுக்கான கொரோனா தீவிர சிகிச்சை பிரிவை துவக்கி வைத்து பார்வையிட்டார். தி.மு.க., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார், முன்னாள் எம்.பி., சுந்தரம், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X