பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் பாசனம் அமைப்பு: விவசாயிகளுக்கு பயிற்சி

Added : செப் 25, 2021
Share
Advertisement
மல்லசமுத்திரம்: கோட்டபாளையத்தில், நுண்ணீர்பாசனம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.மல்லசமுத்திரம் வட்டாரம், கோட்டபாளையம் கிராமத்தில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், நுண்ணீர் பாசனம் அமைத்தல் குறித்த பயிற்சியளிக்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் தனம் தலைமை வகித்தார். நுண்ணீர் பாசனம் அமைப்பது, நன்மைகள் மற்றும் பயிர்

மல்லசமுத்திரம்: கோட்டபாளையத்தில், நுண்ணீர்பாசனம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.


மல்லசமுத்திரம் வட்டாரம், கோட்டபாளையம் கிராமத்தில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், நுண்ணீர் பாசனம் அமைத்தல் குறித்த பயிற்சியளிக்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் தனம் தலைமை வகித்தார். நுண்ணீர் பாசனம் அமைப்பது, நன்மைகள் மற்றும் பயிர் சாகுபடி முறைகள் குறித்து விளக்கமளித்தார். அட்மா திட்ட சேர்மேன் பழனிவேல் முன்னிலை வகித்து, வேளாண்மைத் துறையை அணுகி மானியத்திட்டங்கள் பெற்று விவசாயிகள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். வேளாண்மைத்துறை மூலம் விதைகள், வேளாண் கருவிகள், வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்டவை அரசு மூலம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதனை விவசாயிகள் பெற்று பயிர் சாகுபடி செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். சொட்டுநீர்பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழை துவான் கருவிகள் குறித்து செயல் விளக்கம் செய்து மானியங்கள் பெற தேவையான ஆவணங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் வேல்முருகன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X