பொது செய்தி

தமிழ்நாடு

போராட்டம் நடத்திய மக்கள் கைது

Added : செப் 25, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் அடுத்த ராசாம்பாளையம் பஞ்., மாடகாசம்பட்டியில் அரசு புறபோக்கு நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள், கூரை கொட்டகைகள் அமைத்திருந்தனர். கடந்த, 22ல் போலீசாருடன் சென்ற வருவாய் துறையினர் கொட்டகையை அகற்றினர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் காலை மீண்டும் வீடுகளை அகற்ற வருவாய்துறையினர் முற்பட்டனர். ஆனால்

நாமக்கல்: நாமக்கல் அடுத்த ராசாம்பாளையம் பஞ்., மாடகாசம்பட்டியில் அரசு புறபோக்கு நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள், கூரை கொட்டகைகள் அமைத்திருந்தனர். கடந்த, 22ல் போலீசாருடன் சென்ற வருவாய் துறையினர் கொட்டகையை அகற்றினர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் காலை மீண்டும் வீடுகளை அகற்ற வருவாய்துறையினர் முற்பட்டனர். ஆனால் அதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் கலெக்டர் அலுவலகத்திலேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட, 12 பெண்கள், 11 ஆண்கள் என, 23 பேரை போலீசார் கைது செய்து நாமக்கல் நகராட்சி மண்டபத்தில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் மண்டபத்திலேயே உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, நாமக்கல் பூங்கா சாலையில் சி.பி.எம்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் தமிழ்புலிகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். இந்நிலையில், மண்டபத்தில் இருந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்ததையடுத்து மீண்டும் சாலை மறியல் நடந்தது. எஸ்.பி., சரோஜ் குமார் தாகூர் பேச்சு நடத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X