பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் மேலாண்மை பயிற்சி

Added : செப் 25, 2021
Share
Advertisement
ராசிபுரம்: ராசிபுரம் வட்டார விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ராசிபுரம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், ராசிபுரம் வட்டார அட்மா திட்டத்தின் தலைவருமான ஜெகநாதன் தலைமை வகித்தார். முத்துகாளிப்பட்டி கிராமத்தில்

ராசிபுரம்: ராசிபுரம் வட்டார விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ராசிபுரம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், ராசிபுரம் வட்டார அட்மா திட்டத்தின் தலைவருமான ஜெகநாதன் தலைமை வகித்தார். முத்துகாளிப்பட்டி கிராமத்தில் வேளாண் விரிவாக்க மைய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. நுண்ணீர் பாசனத்தின் அவசியம் மற்றும் பயன்கள், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து வேளாண் உதவி இயக்குனர் சித்திரைச்செல்வி விளக்கமளித்தார். பயறுவகை பயிர்கள், எண்ணெய் வித்து, பருத்தி, மக்காச்சோள பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண் தொழில்நுட்பங்கள், மண்பரிசோதனை செய்து அதற்கேற்ப உரமிடுதல், கோடை உழவு, ஜிப்சம் இடுதல் போன்ற தொழில்நுட்பங்கள் பற்றி உதவி பேராசிரியர் புனிதா விளக்கினார். துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலையரசி, உதவி தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X