பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Added : செப் 25, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் சமுதாய விழிப்புணர்வு பிரசார கலைப்பயணம் பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வெப்படை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கிராமப்பகுதிகளில் நடந்தது. தலைமையாசிரியர்கள் காந்திரூபி, பாஸ்கரன் தலைமை வகித்தனர். வட்டார கல்வி

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் சமுதாய விழிப்புணர்வு பிரசார கலைப்பயணம் பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வெப்படை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கிராமப்பகுதிகளில் நடந்தது. தலைமையாசிரியர்கள் காந்திரூபி, பாஸ்கரன் தலைமை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் வளர்மதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் மல்லிகேஸ்வரி கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இதுகுறித்து, மல்லிகேஸ்வரி கூறியதாவது: பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் வயது வரம்பின்றி கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு சார்பில் மாலை நேர வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதுகுறித்து விழிப்புணர்வு மற்றும் பெண் கல்வி முக்கியத்துவம் குறித்து கலை நிகழ்சிகள் மூலம் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X