பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாள் இரவில் 38 ரவுடிகள் கைது

Added : செப் 25, 2021
Share
Advertisement
நாமக்கல்: தமிழகத்தில், கடந்த சில நாட்களாக, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பழிக்குப்பழியாக நடக்கும் கொலை சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டவர்களும், கொலையானவர்களும் பலர் ரவுடிகள் பட்டியலில் இருந்தனர். அதேபோல், கொள்ளை சம்பவங்களும், வழிப்பறி சம்பவம் மூலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. போலீசார் இரவு

நாமக்கல்: தமிழகத்தில், கடந்த சில நாட்களாக, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பழிக்குப்பழியாக நடக்கும் கொலை சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டவர்களும், கொலையானவர்களும் பலர் ரவுடிகள் பட்டியலில் இருந்தனர். அதேபோல், கொள்ளை சம்பவங்களும், வழிப்பறி சம்பவம் மூலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. போலீசார் இரவு நேர ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியும், இது போன்ற சில சம்பவங்கள் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதையடுத்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், ரவுடிகள், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி, ஜாமினில் உள்ள ரவுடிகள், தலைமறைவாக உள்ளவர்கள் ஆகியோரை கைது செய்ய, டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில், எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் உத்தரவின் பேரில், நேற்று மாவட்டம் முழுவதும், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, ரவுடிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை, கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள், சிறை சென்றுவிட்டு வெளியே வந்தவர்கள், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்கள் என கண்டறியப்பட்டு, 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X