பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பின்றி பொது கழிப்பிடம்; பயன்பாட்டிற்கு வர ஆர்ப்பாட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
எலச்சிபாளையம்: பொது கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி பஞ்., ஜேடர்பாளையம் பகுதியில், 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கூலித்தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. பல மாதங்களாக

எலச்சிபாளையம்: பொது கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி பஞ்., ஜேடர்பாளையம் பகுதியில், 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கூலித்தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. பல மாதங்களாக போதிய பராமரிப்பின்றி பூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்., நிர்வாகத்தில் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பஞ்., தலைவர் சேகர் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். கிளைதலைவர் வேலு, சி.பி.எம் கிளைசெயலாளர் தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X