நாட்டு நலப்பணி திட்ட நிறுவன நாள் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டு நலப்பணி திட்ட நிறுவன நாள் விழா

Added : செப் 25, 2021
Share
நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட நிறுவன நாள் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்து, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தார். தொடர்ந்து மரம் நடுதலின் நோக்கம், அதன் பயன்கள் குறித்து பேசினார். லத்துவாடி ஊராட்சி மன்றத்தலைவர் பரமேசுவரி பேசினார். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் என அனைவரும் சேர்ந்து கல்லூரி

நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட நிறுவன நாள் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்து, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தார். தொடர்ந்து மரம் நடுதலின் நோக்கம், அதன் பயன்கள் குறித்து பேசினார். லத்துவாடி ஊராட்சி மன்றத்தலைவர் பரமேசுவரி பேசினார். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் என அனைவரும் சேர்ந்து கல்லூரி வளாகத்தில், 40 மரக்கன்றுகளை நடவு செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மரக்கன்றுகளை பராமரிக்க அந்தந்த துறைகள் சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் நாகரத்தினம் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X