பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு, 716.54 மி.மீ. 2021 ஆண்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு, 716.54 மி.மீ. 2021 ஆண்டு செப்., முடிய இயல்பு மழையளவு, 407.88 மி.மீ. தற்போது வரை 472.7 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. சராசரிக்கும் அதிகமாக, 64.88 மி.மீ. மழை அளவு பெறப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் வரை நெல், 761 ?ஹக்டேர், சிறுதானியங்கள், 31 ஆயிரத்து, 212 ?ஹக்டேர், பயறு வகைகள், 5,589 ?ஹக்டேர், எண்ணெய் வித்துகள், 29 ஆயிரத்து, 162 ?ஹக்டேர், பருத்தி, 1,381 ?ஹக்டேர், கரும்பு, 5,030 ?ஹக்டேர் என, மொத்தம், 73 ஆயிரத்து, 135 ?ஹக்டேரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 2016-17 முதல் 2020-21 வரை,மூன்று லட்சத்து,70 ஆயிரத்து, 215 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். இதில் ஒரு லட்சத்து,47 ஆயிரத்து, 277 விவசாயிகளுக்கு 160.90 கோடி ரூபாய் பயிர் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 85 ஆயிரத்து, 817 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X