ஆகாயத்தாமரை உடனுக்குடன் அகற்ற கோரிக்கை

Added : செப் 25, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஆற்றுப்பகுதியில் மீண்டும் ஆகாயத்தாமரை படர்ந்து வருவதால், உடனுக்குடன் அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிபாளையம் ஆற்றுப்பகுதியில் தண்ணீர் அதிகளவு செல்வதால், தண்ணீரில் அடித்துவரப்பட்ட ஆகாயத்தாமரை பாலத்தில் பல மாதங்களாக தேங்கி நின்றது. இதனால் துணி துவைக்க, குளிக்க வரும் பொதுமக்கள் திரும்பி சென்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், தி.மு.க.

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஆற்றுப்பகுதியில் மீண்டும் ஆகாயத்தாமரை படர்ந்து வருவதால், உடனுக்குடன் அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிபாளையம் ஆற்றுப்பகுதியில் தண்ணீர் அதிகளவு செல்வதால், தண்ணீரில் அடித்துவரப்பட்ட ஆகாயத்தாமரை பாலத்தில் பல மாதங்களாக தேங்கி நின்றது. இதனால் துணி துவைக்க, குளிக்க வரும் பொதுமக்கள் திரும்பி சென்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், தி.மு.க. சார்பில் மூன்று லட்சம் ரூபாய் செலவில், 25 பேர் ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆற்றில் மீண்டும் ஆகாயத்தாமரை படர்ந்து வருகிறது. இதை அப்படியே விட்டால் ஆறு முழுவதும் பழையபடி படர்ந்து விடும். அவற்றை உடனுக்குடன் அகற்ற பொதுப்பணித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X