பொது செய்தி

தமிழ்நாடு

அரவக்குறிச்சியில் 68.2 மி.மீ., மழை பதிவு: மாயனூருக்கு 6,816 கனஅடி நீர்வரத்து

Added : செப் 25, 2021
Share
Advertisement
கரூர்: அரவக்குறிச்சியில், 68.2 மி.மீ., மழை பெய்துள்ளது. வட கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில், நேற்று முன் தினம் குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவானது. இதனால் மாநிலம் முழுவதும் டெல்டா மற்றும் உள்மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் அரவக்குறிச்சியில், 68.2 மி.மீ., மழை பெய்தது.

கரூர்: அரவக்குறிச்சியில், 68.2 மி.மீ., மழை பெய்துள்ளது. வட கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில், நேற்று முன் தினம் குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவானது. இதனால் மாநிலம் முழுவதும் டெல்டா மற்றும் உள்மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் அரவக்குறிச்சியில், 68.2 மி.மீ., மழை பெய்தது. மேலும் தோகைமலை, 25, கிருஷ்ணராயபுரம், 2.4, மாயனூர், 2, பஞ்சப்பட்டி, 16.8 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 9.70 மி.மீ., மழை பதிவானது.


மாயனூர் கதவணை நிலவரம்: கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணிக்கு வினாடிக்கு, 6,816 கன அடி தண்ணீர் வந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 5,796 கன அடியும், நான்கு கிளை வாய்க்காலில், 1,020 கன அடியும் திறக்கப்பட்டது. கதவணை பகுதிகளில், 2 மி.மீ., மழை பதிவானது.

அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து நேற்று, 700 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, 337 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 87.57 அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X