வாய்க்காலில் மழைநீர் தேக்கம்; அகற்றக்கோரி விவசாயிகள் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாய்க்காலில் மழைநீர் தேக்கம்; அகற்றக்கோரி விவசாயிகள் மனு

Added : செப் 25, 2021
Share
குளித்தலை: குளித்தலை அடுத்த, குமாரமங்கலத்தின் கொடிங்கால் வடிகால் வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்காலிகமாக பாதையில் சிறிய அளவில் குழாய் அமைக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் மழைத்தண்ணீரை சிறிய அளவில் உள்ள குழாயில் வெளியேற்ற முடியாததால், மழை தண்ணீர் மருதூர் ,மேட்டு மருதூர், ராஜேந்திரம், தண்ணீர்

குளித்தலை: குளித்தலை அடுத்த, குமாரமங்கலத்தின் கொடிங்கால் வடிகால் வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்காலிகமாக பாதையில் சிறிய அளவில் குழாய் அமைக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் மழைத்தண்ணீரை சிறிய அளவில் உள்ள குழாயில் வெளியேற்ற முடியாததால், மழை தண்ணீர் மருதூர் ,மேட்டு மருதூர், ராஜேந்திரம், தண்ணீர் பள்ளி, கூடலூர், பரளி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கி, வாழை, நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. விவசாயம் பாதிக்காத வகையில் கொடிங்கால் வடிகால் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள மழை தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலு,ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் முரளிதரன் ஆகியோரிடம் விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். தொடர்ந்து, பாலம் கட்டும் பணி இடத்தில் அமைக்கப்பட்ட சிறிய குழாய்கள் அகற்றப்பட்டு, மழை தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X