குழாய்கள் உடைப்பு; வீணாகும் குடிநீர்| Dinamalar

குழாய்கள் உடைப்பு; வீணாகும் குடிநீர்

Added : செப் 25, 2021
Share
கரூர்: கரூரில் காமராஜர் சிலை அருகே குழாய் உடைந்து சாலையில் அடிக்கடி குடிநீர் சென்ற வண்ணம் உள்ளது.கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே மனோகரா கார்னரில், முன்னாள் முதல்வர் காமராஜர் சிலை உள்ளது. அங்கு தனியார் ஓட்டல் அருகே குழாய் உடைந்து, அடிக்கடி சாலையில் குடிநீர் ஓடிய வண்ணம் உள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. கரூர் நகராட்சி

கரூர்: கரூரில் காமராஜர் சிலை அருகே குழாய் உடைந்து சாலையில் அடிக்கடி குடிநீர் சென்ற வண்ணம் உள்ளது.


கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே மனோகரா கார்னரில், முன்னாள் முதல்வர் காமராஜர் சிலை உள்ளது. அங்கு தனியார் ஓட்டல் அருகே குழாய் உடைந்து, அடிக்கடி சாலையில் குடிநீர் ஓடிய வண்ணம் உள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. கரூர் நகராட்சி பகுதிகளில், ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால், கரூர் நகராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆனால், குடிநீர் சப்ளை விஷயத்தில் நகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கிறது. இந்நிலையில், கரூரில் காமராஜர் சிலை உள்ளிட்ட பல இடங்களில், குழாய் உடைந்து குடிநீர் சாலையில் வீணாக செல்வது வாடிக்கையாக உள்ளது. பல இடங்களில் ஏற்பட்டுள்ள குழாய் உடைப்பை சரி செய்தால், பொதுமக்களுக்கு ஓரளவுக்கு தேவையான குடிநீரை வழங்க முடியும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X