எரியாத மின் விளக்குகள்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

Added : செப் 25, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் நகராட்சியில் எரியாத மின் விளக்குகளை சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த, 2011ல் அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, கரூர் நகராட்சியுடன், தான்தோன்றிமலை, இனாம் கரூர் நகராட்சிகள் மற்றும் சணப்பிரட்டி பஞ்., இணைக்கப்பட்டது. இதில், தான்தோன்றிமலை, இனாம் கரூர் மற்றும் சணப்பிரட்டி பஞ்.,களில் உள்ள விவசாய நிலங்கள் உள்ளிட்ட எக்ஸ்டன்சன் பகுதிகளில்

கரூர்: கரூர் நகராட்சியில் எரியாத மின் விளக்குகளை சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த, 2011ல் அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, கரூர் நகராட்சியுடன், தான்தோன்றிமலை, இனாம் கரூர் நகராட்சிகள் மற்றும் சணப்பிரட்டி பஞ்., இணைக்கப்பட்டது. இதில், தான்தோன்றிமலை, இனாம் கரூர் மற்றும் சணப்பிரட்டி பஞ்.,களில் உள்ள விவசாய நிலங்கள் உள்ளிட்ட எக்ஸ்டன்சன் பகுதிகளில் குடியிருப்பு பெருகியது. ஆனால், போதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு விளக்குகள் அமைக்கப்படவில்லை. மேலும், ஏற்கனவே உள்ள மின் கம்பங்களிலும் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. குறிப்பாக, சணப்பிரட்டி பகுதியில் உள்ள ஐந்து வார்டுகள், காந்தி கிராமம் பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான தெருக்களில் உள்ள மின் கம்பங்களில் போதிய விளக்குகள் இல்லை. மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவை சாலை, ஆர்.டி.ஓ., அலுவலக சாலை உள்ளிட்ட இடங்களில் கூட பெரும்பாலான விளக்குகள் அடிக்கடி எரிவதில்லை. இதனால், வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் பெண்கள் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, கரூர் நகராட்சி பகுதியில் எரியாத நிலையில் தெருக்களில் உள்ள விளக்குகளை பராமரிக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X