ரயில்வே ஸ்டேஷன்களில் மூடப்பட்டுள்ள கழிப்பறை

Added : செப் 25, 2021
Share
Advertisement
கரூர்: திருச்சி, சேலம், ஈரோடு மார்க்கங்களில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில், கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் வழியாக திருச்சி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் சேலம் மார்க்கம் வழியாக நாள் தோறும் சிறப்பு ரயில்கள் சென்று வருகின்றன. நாள்தோறும், ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால், பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கழிப்பறைகள்

கரூர்: திருச்சி, சேலம், ஈரோடு மார்க்கங்களில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில், கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.


கரூர் வழியாக திருச்சி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் சேலம் மார்க்கம் வழியாக நாள் தோறும் சிறப்பு ரயில்கள் சென்று வருகின்றன. நாள்தோறும், ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால், பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கழிப்பறைகள் மூடப்பட்ட நிலையில் உள்ளன. திறந்து வைப்பது இல்லை. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின் றனர். குறிப்பாக, சேலம், திருச்சி மற்றும் ஈரோடு மார்க்கங்களில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கழிப்பறைகள் எந்த நேரமும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன.

இதுகுறித்து, ரயில்வே பயணிகள் கூறியதாவது: திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மார்க்கத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் கழிப்பறைகள் திறக்கப்படுவதில்லை. இதனால், ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு சென்று சாவியை கேட்டு வாங்கி செல்ல வேண்டும். இதில், பெண்களுக்கு தயக்கம் ஏற்படுகிறது. இதனால், ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கழிப்பறைகளை திறந்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X