பல கோடி கைத்தறி ஜவுளி தேக்கம்; தள்ளுபடி மானிய அரசாணை தாமதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல கோடி கைத்தறி ஜவுளி தேக்கம்; தள்ளுபடி மானிய அரசாணை தாமதம்

Added : செப் 25, 2021
Share
சென்னிமலை: சிறப்பு தள்ளுபடி மானிய அரசாணை தாமதமாவதால், பல கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி ஜவுளி ரகம் தேங்கியுள்ளதாக, நெசவாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தயாரிக்கப்படும் ஜவுளி ரகங்களை, விசைத்தறி துணிகளுடன் போட்டி போட்டு விற்பனை செய்ய, ஆண்டு முழுவதும், 20 சதவீதம் தள்ளுபடி மானியத்தை அரசு வழங்குகிறது. தீபாவளி, பொங்கல்

சென்னிமலை: சிறப்பு தள்ளுபடி மானிய அரசாணை தாமதமாவதால், பல கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி ஜவுளி ரகம் தேங்கியுள்ளதாக, நெசவாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தயாரிக்கப்படும் ஜவுளி ரகங்களை, விசைத்தறி துணிகளுடன் போட்டி போட்டு விற்பனை செய்ய, ஆண்டு முழுவதும், 20 சதவீதம் தள்ளுபடி மானியத்தை அரசு வழங்குகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகையை கருத்தில் கொண்டு, சிறப்பு தள்ளுபடி மானியமாக ஆண்டுதோறும் செப்.,15ம் தேதி அண்ணாதுரை பிறந்தநாளில், 10 சதவீதமாக அதிகரித்து, 30 சதவீதமாக, 100 நாட்களுக்கு, அதாவது ஜன.,31 வரை சிறப்பு மானியம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு செப்.,15ம் தேதி முடிந்தும், சிறப்பு தள்ளுபடி மானியம் வழங்க, அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் தமிழகம் முழுவதும், ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், பல கோடி ரூபாய் மதிப்பு ஜவுளி ரகம் தேங்கியுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகமும் முழுமையாக கொள்முதல் செய்யாத நிலையில், சிறப்பு தள்ளுபடி மானியம் தாமதம் ஆவதால், நெசவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, சிறப்பு தள்ளுபடி மானிய அரசாணை பிறப்பிக்க, கைத்தறி கூட்டுறவு சங்க தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X