பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணை பகுதிக்கு இடம் பெயர்ந்ததா சிறுத்தை?

Added : செப் 25, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகில் உள்ள, கூசுமலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு குட்டிகளுடன், சிறுத்தை ஒன்று சுற்றி வந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர், அப்பகுதியில் கூண்டு வைத்தும், ட்ரோன் கேமரா மூலமும் கண்காணித்தனர். இதில் சிறுத்தை நடமாட்டம் தெரியவில்லை. அதே நேரத்தில் சிறுத்தை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகில் உள்ள, கூசுமலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு குட்டிகளுடன், சிறுத்தை ஒன்று சுற்றி வந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர், அப்பகுதியில் கூண்டு வைத்தும், ட்ரோன் கேமரா மூலமும் கண்காணித்தனர். இதில் சிறுத்தை நடமாட்டம் தெரியவில்லை. அதே நேரத்தில் சிறுத்தை சென்றதற்கான கால் தடம் மட்டும் அப்பகுதியில் இருந்தன. இதையடுத்து கூசுமலையைச் சுற்றி உள்ள கரும்பு தோட்டம், ஓசூர் சாலையில் உள்ள மேலுமலை வனப்பகுதி, சிக்காரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் கண்காணித்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை அருகே சிறுத்தையை பார்த்ததாக பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X