பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து அதிகரிப்பு; சோயா விலை குறைவு

Added : செப் 25, 2021
Share
Advertisement
எருமப்பட்டி: நாமக்கல்லில் கோழி தீவனத்திற்கு பயன்படுத்தும் சோயா தட்டுப்பாட்டை போக்க வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் விலை குறைந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. கோழிகளுக்கு புரதச் சத்திற்காக சோயா உள்ளிட்டவற்றை தீவனமாக அரைத்து மக்காச்சோளத்தில் கலந்து பண்ணையாளர்கள் வழங்கி வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக

எருமப்பட்டி: நாமக்கல்லில் கோழி தீவனத்திற்கு பயன்படுத்தும் சோயா தட்டுப்பாட்டை போக்க வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் விலை குறைந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. கோழிகளுக்கு புரதச் சத்திற்காக சோயா உள்ளிட்டவற்றை தீவனமாக அரைத்து மக்காச்சோளத்தில் கலந்து பண்ணையாளர்கள் வழங்கி வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், கடந்தாண்டு வரை, 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சோயா, கடந்த 2 மாதங்களாக, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சிறிய பண்ணையாளர்கள் சோயாவிற்கு பதிலாக கோழிகளுக்கு கம்பு, சோளம் உள்ளிட்ட உணவு பொருட்களை தீவனத்தில் கலந்து ?கொடுத்து வந்தனர். தற்போது, சோயா விலை, 20 ரூபாய் குறைந்து, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோழிப்பண்ணை மூலப் பொருள் விற்பனையாளர் அன்பரசு கூறியதாவது: கடந்த ஆண்டு வரை சோயா விலை, 45 ரூபாய் வரை மட்டுமே இருந்தது. கொரோனா தொற்று காரணமாக சோயா விலை, 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வெளி நாட்டில் இருந்து சோயா இறக்குமதி செய்யப்படுவதால், 20 ரூபாய் வரை குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X