பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., வேட்பாளர் மிரட்டல்: அ.தி.மு.க., வேட்பாளர் புகார்

Added : செப் 25, 2021
Share
Advertisement
சேலம்: பனமரத்துப்பட்டி, ஒன்பதாவது வார்டு தி.மு.க., வேட்பாளர் மிரட்டுவதாக, அ.தி.மு.க., வேட்பாளர் மாணிக்கம், எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். அ.தி.மு.க.,வின், முன்னாள் அமைச்சர் செம்மலை, ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகர், எம்.எல்.ஏ.,க்களான வீரபாண்டி ராஜமுத்து, சேலம் தெற்கு தொகுதி பாலசுப்ரமணியன் ஆகியோருடன் வந்து, பனமரத்துப்பட்டி, ஒன்பதாவது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் மாணிக்கம், நேற்று,

சேலம்: பனமரத்துப்பட்டி, ஒன்பதாவது வார்டு தி.மு.க., வேட்பாளர் மிரட்டுவதாக, அ.தி.மு.க., வேட்பாளர் மாணிக்கம், எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். அ.தி.மு.க.,வின், முன்னாள் அமைச்சர் செம்மலை, ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகர், எம்.எல்.ஏ.,க்களான வீரபாண்டி ராஜமுத்து, சேலம் தெற்கு தொகுதி பாலசுப்ரமணியன் ஆகியோருடன் வந்து, பனமரத்துப்பட்டி, ஒன்பதாவது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் மாணிக்கம், நேற்று, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவிடம் அளித்த புகார் மனு: பனமரத்துப்பட்டி ஒன்றியம், ஒன்பதாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் என்னை எதிர்த்து, தி.மு.க., சார்பில் சுரேஷ்குமார் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடுவதால், என்னை போன்ற மற்ற வேட்பாளர்களுக்கு அச்சம் உள்ளது. அவர் மற்ற வேட்பாளர்களின் ஆதரவாளர்களை மிரட்டுகிறார். தேர்தல் நடத்த வரும் அதிகாரியையும் மிரட்ட வாய்ப்புள்ளது. அவரையும், அவரது உறவினர்களையும் ஓட்டுச்சாவடிக்குள் அனுமதிக்க கூடாது. பாரப்பட்டி ஊராட்சிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியாக, மாநில அரசின் ஊழியரை நியமிக்காமல், எதற்கும் அஞ்சாத மத்திய அரசு ஊழியரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 'சிசிடிவி' கேமராக்களை நிறுவி முழு தேர்தலையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். தேர்தலில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே மனு, கலெக்டர் கார்மேகம், சரக போலீஸ் டி.ஐ.ஜி., மகேஸ்வரி ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X