பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.பி.எல்., போட்டியை மையப்படுத்தி பணம், நகைகளை வைத்து சூதாட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
சேலம்: ஐ.பி.எல்., போட்டிகளை மையப்படுத்தி பணம், வெள்ளி, நகை, வீட்டுமனைகளை வைத்து சூதாட்டம் நடக்கிறது.கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீனி போடும், 14வது ஐ.பி.எல்., போட்டியில், எட்டு அணிகள் மோதுகின்றன. அதன் முதல் கட்ட போட்டி, கடந்த ஏப்., 9ல் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்த நிலையில், கொரோனாவால் நிறுத்தப்பட்டது. தற்போது, ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த, 19ல் தொடங்கி நடக்கிறது.

சேலம்: ஐ.பி.எல்., போட்டிகளை மையப்படுத்தி பணம், வெள்ளி, நகை, வீட்டுமனைகளை வைத்து சூதாட்டம் நடக்கிறது.


கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீனி போடும், 14வது ஐ.பி.எல்., போட்டியில், எட்டு அணிகள் மோதுகின்றன. அதன் முதல் கட்ட போட்டி, கடந்த ஏப்., 9ல் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்த நிலையில், கொரோனாவால் நிறுத்தப்பட்டது. தற்போது, ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த, 19ல் தொடங்கி நடக்கிறது. இந்த போட்டிகளை மையப்படுத்தி, தொழிலாளி முதல் வியாபாரி, தொழிலதிபர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும் சூதாட்டத்தில் களம் இறங்கி உள்ளனர். தற்போது புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ள, டில்லி, சென்னை, பெங்களூரு, கோல்கட்டா ஆகிய அணிகள் மீது, அதிகளவில் பந்தயம் கட்டப்படுவதால், அதற்கு எதிராக கட்டுபவர்களுக்கு, பந்தய தொகை இரு மடங்கு தருவதாக உறுதி அளிக்கப்படுகிறது. கோப்பையை மும்பை அணி வெல்ல வாய்ப்புள்ளதாக, முன்னாள் வீரர்கள் தெரிவித்த கருத்தால், அந்த அணிக்கு சூதாட்ட கும்பலிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. வெள்ளி தொழிலுக்கு பெயர் பெற்ற சேலத்தில், வெள்ளி கட்டிகள், ஈரோட்டில் ஜவுளி, வீட்டுமனை, சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் தொழிலதிபர்கள் இடையே தங்க காசுகள் பந்தய பொருட்களாக வைக்கப்படுகின்றன. ஒரு போட்டியில் அதிக ரன் எடுக்கும் வீரர், விக்கெட் எடுக்கும் வீரர் மீது பந்தயம் கட்டுவதும் அதிகரித்துள்ளது. பந்தயத்தில் ஈடுபடுவோருக்கு, நடுவர்களாக கமிஷன் அடிப்படையில் ஏஜன்டுகளும் செயல்படுகின்றனர். போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், சூதாட்டம் மேலும் சூடுபறக்கும் என்பதால், உளவுத்துறை டி.ஜி.பி.,க்கு அறிக்கை அளித்துள்ளது. அதனால், மாவட்ட, மாநகரங்களில் சூதாட்டங்களில் ஈடுபடுவோரை, குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார், கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X