பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி செய்ய முடியாதோர் பட்டியல் அனுப்பி வைப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
மேட்டூர்: கூட்டுறவு சங்கங்களின் நகைக் கடன் பெற்றவர்களில் தள்ளுபடி செய்ய முடியாதவர்கள் பட்டியல் விபரம் நேற்று அனைத்து சங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.தமிழகத்தில் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் உள்பட, 6,000 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும், 5 சவரன் நகை அடகு வைத்தவர்களுக்கு, அதற்கான தொகை தள்ளுபடி செய்யப்படும் என

மேட்டூர்: கூட்டுறவு சங்கங்களின் நகைக் கடன் பெற்றவர்களில் தள்ளுபடி செய்ய முடியாதவர்கள் பட்டியல் விபரம் நேற்று அனைத்து சங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.


தமிழகத்தில் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் உள்பட, 6,000 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும், 5 சவரன் நகை அடகு வைத்தவர்களுக்கு, அதற்கான தொகை தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் நகை அடகு வைத்ததில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. பல சங்கங்களில் கவரிங் நகை மற்றும் நகைகளை அடகு வைக்காமலே மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களில் நகை அடகு வைத்தவர்களில் யாருக்கெல்லாம் தள்ளுபடி செய்ய முடியாது என்ற பட்டியலை நேற்று கூட்டுறவு சங்கங்களுக்கு ஆன்லைனில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கூட்டுறவு சங்க செயலாளர்கள் சிலர் கூறியதாவது: கூட்டுறவு சங்கங்களில் ஒரு முறைக்கு மேல் நகை அடகு வைத்தவர்கள், ஒரு முறைக்கு மேல் வேறு சங்கங்களில் அடகு வைத்தவர்கள், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திலுள்ள சங்கத்தில் அடகு வைத்தவர்கள் என நகை அடகு வைத்த, 60 சதவீதத்திற்கும் மேலானவர்கள் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்ற விபரத்துடன் கூடிய பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X