பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு ரயிலில் வந்த 585 டன் யூரியா

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: சென்னை மணலியில் இருந்து, நடப்பு பருவத்திற்கு தேவையான, 585 டன் எம்.எப்.எல்., யூரியா சரக்கு ரயில் மூலம் திருவண்ணாமலை வந்தது. இது குறித்து, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன் கூறியதாவது: நடப்பு பருவத்திற்கான தேவையான, வேளாண் இடுபொருட்களான விதைகள் மற்றும் உரங்கள் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு

திருவண்ணாமலை: சென்னை மணலியில் இருந்து, நடப்பு பருவத்திற்கு தேவையான, 585 டன் எம்.எப்.எல்., யூரியா சரக்கு ரயில் மூலம் திருவண்ணாமலை வந்தது. இது குறித்து, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன் கூறியதாவது: நடப்பு பருவத்திற்கான தேவையான, வேளாண் இடுபொருட்களான விதைகள் மற்றும் உரங்கள் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணலியில் இருந்து ரயிலில் வந்துள்ள, 585 டன் எம்.எப்.எல்., யூரியா தனியார் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்களில், 1,630 டன் யூரியா, 1,394 டன் டி.ஏ.பி., மற்றும் 1,916 டன் பொட்டாஷ், 4,507 டன் காம்பளக்ஸ் ஆகிய உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X