பொது செய்தி

தமிழ்நாடு

விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே விபத்து ஏற்படுத்தி, இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவுபடி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேடு சாமந்திபுரத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவர், 2004ம் ஆண்டு சந்தவாசல் பகுதியில் அரசு விரைவு பஸ் மோதிய விபத்தில் பலியானார். இதையடுத்து அவரது மனைவி வள்ளிம்மாள் மற்றும் குடும்பத்தினர், திரவண்ணாமலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே விபத்து ஏற்படுத்தி, இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவுபடி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேடு சாமந்திபுரத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவர், 2004ம் ஆண்டு சந்தவாசல் பகுதியில் அரசு விரைவு பஸ் மோதிய விபத்தில் பலியானார். இதையடுத்து அவரது மனைவி வள்ளிம்மாள் மற்றும் குடும்பத்தினர், திரவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, அர்ச்சுனன் குடும்பத்திற்கு, ஆறு லட்சத்து, 72 ஆயிரத்து, 106 ரூபாய் இழப்பீடாக வழங்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் இழப்பீடு வழங்கவில்லை. அர்ச்சுனன் குடும்பத்தினர் நிறைவேற்று மனுவை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். வழக்கை நீதிபதி திருமகள் விசாரித்து, அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, கண்ணமங்கலம் வழியாக வேலூர் சென்ற அரசு பஸ், நேற்று முன்தினம் ஜப்தி செய்யப்பட்டது. அதில் பயணம் செய்த பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X