பொது செய்தி

தமிழ்நாடு

அருணாசலேஸ்வரர் கோவில் கோசாலையில் பசுமாடு உயிரிழப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கோசாலையில், பசுமாடு பராமரிப்பின்றி உயிரிழந்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் நேர்த்திக்கடனாக, ஆண்டுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பசுமாடுகளை தானமாக கொடுக்கின்றனர். அனைத்து பசுக்களையும் பராமரிக்க முடியாததால், குறைந்தளவு பசுக்களை மட்டும் வைத்து கொண்டு, மீதமுள்ள பசுக்களை மகளிர் சுய

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கோசாலையில், பசுமாடு பராமரிப்பின்றி உயிரிழந்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் நேர்த்திக்கடனாக, ஆண்டுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பசுமாடுகளை தானமாக கொடுக்கின்றனர். அனைத்து பசுக்களையும் பராமரிக்க முடியாததால், குறைந்தளவு பசுக்களை மட்டும் வைத்து கொண்டு, மீதமுள்ள பசுக்களை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு கடந்த மாதம், 18 பசுக்கள் வழங்கிய நிலையில், தற்போது, 35 பசுக்கள் உள்ளன. இவற்றின் பராமரிப்புக்காக மாதந்தோறும், ஒரு லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. தற்போது கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் இணை ஆணையர் அசோக்குமார், கூடுதல் பொறுப்பாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாக பணியை, கடந்த இரண்டு மாதங்களாக கவனித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 15 மாதங்களுக்கு முன் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதில் ஒரு பசுவின் கால் முறிந்தது. இவற்றை கவனித்து சிகிச்சை அளிக்காமல் விட்டதால், காலில் புழு வந்து எழுந்து நிற்கமுடியாமல் படுத்த படுக்கையாக கிடந்த பசு, கடந்த, 22ல், உயிரிழந்தது. இதை கோவில் நிர்வாகம் மூடி மறைக்கும் வேலையில் ஈடுபட்டது. தற்போது, இறந்த பசுவின் போட்டோவை, கோவில் ஊழியர்களே எடுத்து சமூக வலைதளங்களில், நேற்று பரவவிட்டதால், பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X