மரக்கழிவில் இருந்து உருவான மகத்தான சிற்பங்கள்..| Dinamalar

மரக்கழிவில் இருந்து உருவான மகத்தான சிற்பங்கள்..

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021
Share
மழை வெள்ளம் காரணமாக விழுந்த மரங்களில் இருந்து உருவாக்கப்பட்ட மரச்சிற்ப கண்காட்சி சென்னையில் நடந்து வருகிறது.நாகர்கோவில் பகுதியில் உள்ள ‛கொல்வேல்' என்ற பகுதியைச் சேர்ந்தவர் விஜய் பிச்சுமணி.தற்போது சென்னையில் வசிக்கும் இவர் முதுநிலை ஒவியப்படிப்பு படித்தவர்.நல்ல முழுமையான மரங்களை வாங்கி அதை கடைந்து சிற்பம் செய்வது மரச்சிற்பமாகும்.ஆனால் இவரோ மக்கள்latest tamil news


மழை வெள்ளம் காரணமாக விழுந்த மரங்களில் இருந்து உருவாக்கப்பட்ட மரச்சிற்ப கண்காட்சி சென்னையில் நடந்து வருகிறது.
நாகர்கோவில் பகுதியில் உள்ள ‛கொல்வேல்' என்ற பகுதியைச் சேர்ந்தவர் விஜய் பிச்சுமணி.தற்போது சென்னையில் வசிக்கும் இவர் முதுநிலை ஒவியப்படிப்பு படித்தவர்.


latest tamil news


நல்ல முழுமையான மரங்களை வாங்கி அதை கடைந்து சிற்பம் செய்வது மரச்சிற்பமாகும்.ஆனால் இவரோ மக்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய மரக்கட்டைகளில் இருந்து அதன் தன்மைக்கேற்ப ரம்பம், உளி உள்ளீட்ட பொருட்களை பயன்படுத்தி மர ஒவியம் படைக்கிறார்.


latest tamil news


Advertisement

சென்னையில் மழை வெள்ளம் காரணமாக விழுந்து வீணாகக் கிடந்த மரங்களைப் பார்த்ததும்தான் இவருக்குள் இப்படி ஒரு எண்ணம் வந்துள்ளது.
வீணாகக் கிடந்த மரங்களையும் மரக்கடைகளில் ஓதுக்கிய தள்ளிய மரத்துண்டுகளையும் கொண்டு மர ஒவியம் படைத்துவரும் மணிகண்டன் தனது படைப்புகளை ‛கொல்வேல்' என்ற தலைப்பில் கண்காட்சியாக வைத்துள்ளார்.


latest tamil news


சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுசில் நடந்துவரும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பல மர ஒவியங்கள் வித்தியாசமானவையாக இருக்கின்றன.


latest tamil news


தங்கத்தை விட உழைப்பாளியின் கைகளும், கால் பாதங்களும் முக்கியமானவை அவை நுாறு சதவீத தங்கத்திற்கு ஈடானவை என்ற தலைப்பில் வைத்துள்ள மரச்சிற்பம் வித்தியாசமாக இருக்கிறது இதே போல மீன் மற்றும் செம்பருத்திப் பூ போன்ற மர ஒவியங்களும் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கிறது.


latest tamil news


மரஒவியர் விஜய் பிச்சுமணியின் எண்:97890 33626.-எல்.முருகராஜ்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X