அரசியல் செய்தி

தமிழ்நாடு

கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் காங்கிரசார் ரகளை: இருவர் காயம்

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சிவகங்கை: தேவகோட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் முன்னிலையில், இரு தரப்பினர் ரகளையில் ஈடுபட்டதால், இருவர் காயமடைந்தனர்.சிவகங்கை மாவட்டம் கன்னங்குடி ஒன்றிய நகர செயலராக இருந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஆர்.ராமசாமி மகன் கருமாணிக்கம் கடந்த சட்டசபை தேர்தலில் திருவாடனை தொகுதியில் வெற்றி பெற்றதால் நகர செயலர்
தேவகோட்டை, காங்கிரஸ் கூட்டம், கார்த்திசிதம்பரம், தொண்டர்கள் ரகளை, இருவர் காயம்

சிவகங்கை: தேவகோட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் முன்னிலையில், இரு தரப்பினர் ரகளையில் ஈடுபட்டதால், இருவர் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் கன்னங்குடி ஒன்றிய நகர செயலராக இருந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஆர்.ராமசாமி மகன் கருமாணிக்கம் கடந்த சட்டசபை தேர்தலில் திருவாடனை தொகுதியில் வெற்றி பெற்றதால் நகர செயலர் பதவியில் இருந்து விலகினார். அந்த இடத்திற்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக தேவகோட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கார்த்தி எம்பி முன்னிலையில் காங்கிரசார் அடிதடி

latest tamil news



கூட்டம் நடப்பதை காங்கிரசார் சிலர் செல்போன்களில் பதிவு செய்தனர். கார்த்தி ஆதரவாளர்கள் செல்போன்களை பறிக்க முயன்றனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இக்கூட்டத்தில், கருமாணிக்கம் ஆதரவாளர்களுக்கும், காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியதை அடுத்து அடிதடியில் ஈடுபட்டனர். அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி எறிந்தும், தாக்கியும் ரகளையில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் அந்த இடம் போர்க்களமாக காட்சி அளித்தது. கார்த்தி சிதம்பரம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் காங்கிரசாரின் ரகளை தொடர்ந்தது. இதனையடுத்து கோபமடைந்த கார்த்தி கூட்டத்திலிருந்து வெளியேறினார். கூட்டம் பாதியிலேயே முடிந்தது. இந்த மோதலில் இருவருக்கு காயம் ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
26-செப்-202106:21:36 IST Report Abuse
Siva Kumar காவல் துறை யாரையும் கைது செய்யவில்லையா?
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
26-செப்-202101:56:14 IST Report Abuse
BASKAR TETCHANA தி.மு.க.வின் கைக்கூலிகள் இவர்கள். இவர்கள் எங்கு கூட்டம் போட்டாலும் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்காது இந்தியா முழுதும் இதில் தமிழகத்தில் சொல்லவும் வேண்டுமா. இந்த கார்த்திக்கும் அவன் அப்பாவுக்கும் இதே வேலை. வேறொன்றும் இல்லை தமிழக காங்கிரசின் தலைவராக தன் மகனை நிற்க வைப்பதற்கு தான் இந்த ஏற்பாடுகள். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
25-செப்-202123:40:14 IST Report Abuse
DARMHAR மக்கள் இனிமேல் பானா சீனாவையும் அவரது மகன் கார்த்தியையும் வெத்து வேட்டுக்கள் என்று மனதில் நினைத்து நம்பாமல் இருந்தால் சரி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X