பொது செய்தி

இந்தியா

கூட்டுறவு இயக்கத்தை பலப்படுத்த மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம்: அமித்ஷா

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛கூட்டுறவு இயக்கத்தை பலப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.நாட்டின் கூட்டுறவு இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன், மத்திய அரசு ஜூலையில், கூட்டுறவுக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, கூட்டுறவு அமைச்சர் பொறுப்பு
கூட்டுறவு, அமித்ஷா, மத்திய அரசு, மாநிலங்கள்

புதுடில்லி: ‛‛கூட்டுறவு இயக்கத்தை பலப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.


latest tamil news


நாட்டின் கூட்டுறவு இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன், மத்திய அரசு ஜூலையில், கூட்டுறவுக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, கூட்டுறவு அமைச்சர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று டில்லியில் முதன் முறையாக இந்திய கூட்டுறவு மாநாடு நடைபெற்றது.


latest tamil news



இந்த மாநாட்டில் அமித்ஷா பேசியதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் தொடக்க நிலை வேளாண் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்த்தப்படும். நாடு முழுவதும் 65 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மாநில பட்டியலில் உள்ளபோது, மத்திய அரசு இதற்கு ஏன் தனியாக ஒரு அமைச்சகத்தை உருவாக்கியது என சிலர் வியப்படைகின்றனர். இதற்கு சட்ட ரீதியில் பதில் அளிக்கப்படும். மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும். மோதல் போக்கு இருக்காது. கூட்டுறவு இயக்கத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவோம்.


latest tamil news


இத்துறையை நவீனப்படுத்தி பலப்படுத்தவே கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. முன்னெப்போதும் விட கூட்டுறவு இயக்கத்தின்தேவை இன்று மிக அதிகமாக உள்ளது. நாட்டின் வளர்ச்சியில் கூட்டுறவு சங்கங்கள் பெரிய அளவில் பங்காற்றுகின்றன. இந்தியாவை 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற கூட்டுறவு சங்கங்கள் மிக முக்கிய பங்காற்ற உள்ளது. புதிய கூட்டுறவு கொள்கை விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-செப்-202107:20:34 IST Report Abuse
அப்புசாமி அண்ணாமலையார் உளவு ரிப்போர்ட் ஒழுங்கா வந்துக்கிட்டிருக்கா?
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
26-செப்-202100:29:20 IST Report Abuse
J. G. Muthuraj மாநிலங்களுக்கு கீழே செயல்பட்டுக்கொண்டிருக்கிற 62 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களை அப்படியே மத்திய அரசு கையில் எடுக்கிறதே......மாநிலங்களோடு சேர்ந்து செயல்படுவோம் என்று சொல்லிவிட்டு அதற்கென்று தனி அமைச்சகம் அமைத்து, புதிய கூட்டுறவு கொள்கையும் உருவாக்கப் போகிறதாம்......மாநில அரசிடம் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்.....அவர்களின் விருப்பப்படி செய்யுங்கள்.....ஒன்றிய அரசே மாநில கட்டமைப்புகளை குறிப்பாக வேளாண் கூட்டுறவு சங்கங்களை தங்களுக்குரியதாக வாரிக்கொள்ளக்கூடாது.....இதற்கு பெயர் மாநிலங்களோடு இணைந்து செயல்படுவதா?...
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
25-செப்-202119:34:23 IST Report Abuse
Dhurvesh 21000 கோடி ஹெராயின் உங்கள் ஊர் முந்திரா portil பேச்சே காணோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X