பொது செய்தி

தமிழ்நாடு

8 துப்பாக்கிகள் உள்பட ஆயுதங்கள் பறிமுதல்:நெல்லையில் டி.ஜி.பி.,சைலேந்திரபாபு ஆய்வு

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:தமிழக போலீஸ் டி.ஜி.பி.,சைலேந்திரபாபு நெல்லையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இருதரப்பினர் ஜாதி ரீதியாக பழிக்கு பழியாக கொலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதே கும்பல் திண்டுக்கல்லிலும் கொலையில் ஈடுபட்டனர். இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக போலீஸ் டி.ஜி.பி.,சைலேந்திரபாபு நேற்று திருநெல்வேலி வந்தார்.
 8 துப்பாக்கிகள் உள்பட ஆயுதங்கள் பறிமுதல்:நெல்லையில் டி.ஜி.பி.,சைலேந்திரபாபு ஆய்வு

திருநெல்வேலி:தமிழக போலீஸ் டி.ஜி.பி.,சைலேந்திரபாபு நெல்லையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இருதரப்பினர் ஜாதி ரீதியாக பழிக்கு பழியாக கொலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதே கும்பல் திண்டுக்கல்லிலும் கொலையில் ஈடுபட்டனர். இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக போலீஸ் டி.ஜி.பி.,சைலேந்திரபாபு நேற்று திருநெல்வேலி வந்தார். திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அவருடன் தென்மண்டல ஐ.ஜி..அன்பு, நெல்லை போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன், எஸ்.பி.,க்கள் நெல்லை மணிவண்ணன், துாத்துக்குடி ஜெயக்குமார், தென்காசி கிருஷ்ணராஜ், கன்னியாகுமரி பத்ரிநாராயணன், நெல்லை மாநகர துணைகமிஷனர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் டி.ஜி.பி.,சைலேந்திரபாபு கூறியதாவது: திருநெல்வேலியில் 2012-13 ஆண்டுகளில் நடந்த கொலைகளுக்கு பழிவாங்கும் விதமாக தற்போது கொலைகள் நெல்லையிலும், திண்டுக்கல்லிலும் நடந்துள்ளன. இதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 48 மணிநேரத்தில் ரவுடிகளுக்கு எதிராக ஆபரேசன் டிஸ்ஆர்ம் என்ற சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 512 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 935 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பழைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறோம். குண்டர் சட்டத்திலும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கூலிப்படைகள் கண்காணிக்கப்படுகின்றன. பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களில் 8 துப்பாக்கிகள் உள்ளன. எனவே கண்காணிப்புகள் தொடர்கிறது என்றார். தொடர்ந்து மாநகர போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு செய்த டி.ஜி.பி.,சைலேந்திரபாபு, திருநெல்வேலி மாநகர போலீசார் குடியிருப்பிலும் சென்று போலீசாரின் குடும்பத்தினரிடம் குறைகள் கேட்டறிந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X