ஆப்கனில் தாலிபான்களது கொடூரமான தண்டனை சட்டத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானை முன்னதாக தலிபான் பயங்கரவாத அமைப்பு முழுவதுமாக ஆக்கிரமித்து ஆட்சி செய்து வருகிறது. கடந்த 1996ம் ஆண்டுமுதல் 2000ம் ஆண்டுவரை தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தபோது கொடூரமான ஷரியா சட்டங்கள் அமலில் இருந்தன.மேலும் பெண்களது கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன. தற்போது 20 ஆண்டுகள் கழித்து

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானை முன்னதாக தலிபான் பயங்கரவாத அமைப்பு முழுவதுமாக ஆக்கிரமித்து ஆட்சி செய்து வருகிறது. கடந்த 1996ம் ஆண்டுமுதல் 2000ம் ஆண்டுவரை தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தபோது கொடூரமான ஷரியா சட்டங்கள் அமலில் இருந்தன.



latest tamil news



மேலும் பெண்களது கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன. தற்போது 20 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிடம் இருந்து ஆப்கானிஸ்தானை கைப்பற்றியிருக்கும் தாலிபான்கள் மீண்டும் அந்த கொடூர ஆட்சியை அமலுக்கு கொண்டு வரக்கூடாது என உலக நாடுகள் பல வலியுறுத்தி வந்தன.
இதனை ஏற்றுக்கொள்ளும் வகையில் தாலிபான் அரசு தங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தி கொள்வதாக முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால் சமீபத்தில் இதுகுறித்து வெளியான செய்தி ஒன்றில் மீண்டும் அதிர்ச்சி கிளம்பியது. குற்றவாளிகளை கல்லால் அடித்துக் கொல்வது, கை, கால்களை வெட்டுவது உள்ளிட்ட கொடூரமான ஷரியா சட்டங்கள் மீண்டும் பின்பற்றப்படும் என்று தாலிபான்கள் முன்னதாக அறிவித்து இருந்தன.


latest tamil news



தற்போது இதற்கு அமெரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க மாகாணத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் ஒருகையில் தாலிபான் அரசு மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆப்கன் மக்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச அளவில் உலகநாடுகளுடன் சேர்ந்து அமெரிக்காவும் குரல் கொடுக்கும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-செப்-202107:18:10 IST Report Abuse
அப்புசாமி அமெரிக்கா,குவாண்டானோமா கைதிகளை நடத்திய விதம் தெரிஞ்சவங்களுக்கு ஷரியா தண்டனை ஜுஜுபி.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
26-செப்-202106:29:55 IST Report Abuse
 Muruga Vel காலத்துக்கு தகுந்தாப்போல சட்ட திட்டங்களில் மாற்றம் கொண்டு வருவது நல்லது ..ஷரியா சட்டங்கள் இயற்றிய காலத்தில் தொழிற்புரட்சி கிடையாது ..மின்சாரம் கிடையாது ... .சுகபோக வாழ்க்கைக்கு நவீனம் வேண்டும் ..மத்த விஷயங்களுக்கு ஷரியா வேணும்னு சொல்றது சரியில்லை ..
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
25-செப்-202123:33:24 IST Report Abuse
Vena Suna இஸ்லாம் மத ஆதி கால சட்டங்களை தான் அவர்கள் பின்பற்றுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X