'ஆப்கன் பயங்கரவாத அமைப்பை பாராட்டிய அமெரிக்க முன்னாள் அதிபர்'-:இம்ரான் கான் உளறல்

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
நியூயார்க்: முன்னதாக ஐநா., பொதுக்கூட்டத்தில் இம்ரான் கான் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து வெளியிட்ட வீடியோவை இந்தியா விமர்சித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் குறித்து இம்ரான் பேசிய தவறான தகவல் தற்போது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.ஐநா., உறுப்பினர் நாடான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள

நியூயார்க்: முன்னதாக ஐநா., பொதுக்கூட்டத்தில் இம்ரான் கான் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து வெளியிட்ட வீடியோவை இந்தியா விமர்சித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் குறித்து இம்ரான் பேசிய தவறான தகவல் தற்போது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.latest tamil newsஐநா., உறுப்பினர் நாடான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாத காரணத்தால் அவர் சார்பாக அவர் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரசனை என்றும் இதனை சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர இதில் ஐநா., சபை கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்திய அரசு நினைக்கிறது.
ஐநா., உறுப்பினர்களும் காஷ்மீர் விவகாரத்தை நீண்ட காலமாகவே இந்தியாவின் உள்நாட்டு பிரச்னையாகவே கருதுகின்றனர். இந்நிலையில் ஐநா., பொதுக்கூட்டத்தில் இம்ரான் கான் காஷ்மீர் பிரச்னை குறித்துப் பேசியது இந்திய அரசை அதிருப்தி அடையச் செய்தது.
இதன் மூலமாக உலக அரங்கில் இந்தியா குறித்த தவறான புரிதலை பாகிஸ்தான் பரப்புவதாக பொதுக்கூட்டத்தில் இந்தியா குற்றஞ்சாட்டியது.
பாகிஸ்தான் அரசு பயங்கரவாத அமைப்புகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக இந்திய அரசு நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது. இதுகுறித்து ஐநா., கூட்டத்தில் பேசிய இந்திய பிரதிநிதி ஸ்னேஹா துபே, பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதிகள் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வருவதை மறைப்பதற்காகவும் இம்ரான் இந்தியாவை சர்வதேச அரங்கில் அவமதிக்கவும் காஷ்மீர் விவகாரத்தை ஐநா., கூட்டத்தில் பேசுகிறார் என குற்றஞ்சாட்டி இருந்தார்.
இது ஒருபுறம் இருக்க, முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் குறித்த தவறான தகவலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான முஜாஹிதீன் அமைப்பை ரொனால்ட் ரீகன் அமெரிக்காவின் உருவாக்கத்துக்கு காரணமான அரசியல் தலைவர்களுடன் ஒப்பிட்டு உயர்வாகப் பேசியதாக இம்ரன் தெரிவித்துள்ளார்.


latest tamil newsரொனால்ட் ரீகன் குறித்த இந்த வதந்தி நீண்டகாலமாகவே இணையத்தில் வலம்வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உறுதி செய்யப்படாத இந்த தகவலை ஐநா., கூட்டத்தில் வீடியோ வாயிலாக இம்ரான் பேசியது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அவரது இந்த தவறான தகவலையும் இந்தியா விமர்சித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
26-செப்-202108:48:16 IST Report Abuse
RajanRajan என்ன பண்ணுறது அங்கே ஒரு உளறல் அதிபர் இங்கேயும் ஒரு உளறல் முதல்வர். காலம் போடும் கோலமிருக்கே ஆட்டி படைக்குதுப்பா.
Rate this:
Cancel
26-செப்-202107:15:58 IST Report Abuse
அப்புசாமி டிசம்பர் 24, 1979 ரொனால்ட் ரீகன் ஆப்கானிஸ்தான் போராளிங்களை வெள்ளை மாளிகையில் சந்திச்ச போட்டோ இணையத்தில் சிரிப்பா சிரிக்குது. அமெரிக்காவுக்கு தேவைன்னா அவிங்க விடுதலை போராளிங்க. வேணாம்னா தீவிரவாதிகள் ஆயிடுவாங்க. இம்ரான் இந்த விஷயத்தில் உளறவில்லை.
Rate this:
Cancel
26-செப்-202107:10:52 IST Report Abuse
அப்புசாமி அமரிக்கா ஒண்ணும் அறவழிப் போராட்டத்தில் உருவாக வில்லை. 1600 களிலிருந்து 1800 வரை Indian Removal என்னும் கோட்பாட்டை வெச்சுக்கிட்டு கோடிக்கணக்கான சிவப்பிந்தியர்களை கொன்று குவித்த நல்லவங்க. ரீகனுக்கு ஆப்கான் எக்கேடு கெட்டுப் போனாலும் கவலையில்லை. அப்போது அங்கே ஊடுருவிய ரஷியா தோற்கணும் என்பதே குறிக்கோள். அப்போது அங்கே இருந்த முகமது பக்தியார் போன்ற வர்களுக்கு அமெரிக்க உதவிகள் செய்யப்பட்டு வந்தன. ரீகன் காலத்தில் நடந்த Iran~Contra ஊழல் உலக்ப் பிரசித்தம். இதே ரீகன் தான் சீனாவில் முதலுடுகளை அதிகரிச்சு இன்னிக்கி இந்த லெவலுக்கு வளர்த்து உட்டவரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X